துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் மரணம்: கமல்ஹாசன் இரங்கல்


துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் மரணம்: கமல்ஹாசன் இரங்கல்
x
தினத்தந்தி 5 Jan 2022 3:49 AM IST (Updated: 5 Jan 2022 3:49 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் மரணம்: கமல்ஹாசன் இரங்கல் ‘தவிக்கும் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவேண்டும்’.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இருந்து வெளியேறிய தோட்டா சிறுவன் புகழேந்தியின் இன்னுயிரை பறித்துவிட்டது. பிள்ளையை துள்ளத்துடிக்க பறிகொடுத்த பெற்றோரின் இழப்பு அளவீடற்றது.

அவர்களுக்கு என் ஆறுதல்கள். புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1 More update

Next Story