மகன் கண் முன்னே பயங்கரம் மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவன்
தரக்குறைவாக பேசியதால் மகன் கண் முன்னே மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்தவர் தளபதி (வயது 52). மீனவரான இவர், கப்பலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (49). இருவரும் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் இளம்பாரதி, கப்பலில் வேலை செய்து வருகிறார். இளைய மகன் அருண், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக உள்ளார். மகளுக்கு திருமணமாகி ராயபுரத்தில் கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
குத்திக்கொலை
நேற்று முன்தினம் இரவு அருண் வீட்டுக்கு வந்தார். அப்போது தனது தாயார் சண்முகப்பிரியா கூச்சல் போடுவதை கண்டு அலறி அடித்து உள்ளே சென்று பார்்த்தார். அங்கு படுக்கை அறையில் கட்டிலில் படுத்து இருந்த தனது தாய் சண்முகப்பிரியாவை, தனது தந்தை தளபதி கத்தியால் குத்தி கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார்.
அருணை கண்டதும் கத்தியை கீழே போட்டுவிட்டு தளபதி தப்பி ஓடிவிட்டார். அருண் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது தாயாரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சண்முகப்பிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனமலை வழக்குப்பதிவு செய்து, அருகில் உள்ள சுனாமி குடியிருப்பில் பதுங்கியிருந்த தளபதியை கைது செய்தார்.
போலீசாரிடம் தளபதி அளித்த வாக்குமூலம் வருமாறு:-
தரக்குறைவாக பேசியதால் கொன்றேன்
நான், 4 ஆண்டுகளாக மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லவில்லை. இதனால் என் மனைவி, மகன்களுடன் எனக்கு அடிக்கடி தகராறு ஏற்படும். இதன் காரணமாக என் மனைவி, சில வருடங்களுக்கு முன்பு என்னை விட்டு பிரிந்து அவளது தாய் வீட்டில் வசித்து வந்தாள். கடந்த 4 மாதமாக என்னோடு சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தாள்.
நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி சண்முகப்பிரியாவிடம் சாப்பாடு போடுமாறு கேட்டேன். அதற்கு அவள், “வேலைக்கு போகாமல் இப்படி தினமும் குடித்து விட்டு வருகிறாயே... உனக்கெல்லாம் சாப்பாடு ஒரு கேடா?” என என்னை பார்த்து தரக்குறைவாக பேசினாள்.
பின்னர் சாப்பாடு போட்டுவிட்டு படுக்கை அறையில் சென்று படுத்துவிட்டாள். சாப்பிட்டு முடிந்ததும் எனக்கு போதை தலைக்கேறியது. படுக்கை அறைக்கு சென்ற நான், என் மனைவியின் முகத்தை பார்த்ததும் மேலும் கோபம் வந்தது. அருகில் பழம் நறுக்க வைத்திருந்த கத்தியால் என் மனைவியின் மார்பில் சரமாரியாக குத்தி கொன்றேன்.
அப்போது வெளியே சென்றிருந்த என் மகன் அருண், சத்தம் போட்டுக்கொண்டு ஓடிவந்து என் கையில் இருந்த கத்தியை தட்டிவிட்டான். இதனால் பயந்துபோன நான், அங்கிருந்து ஓடி சுனாமி குடியிருப்பு பகுதியில் பதுங்கி ெகாண்டேன். அங்கு வைத்து என்னை போலீசார் கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story