தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாக நடந்து வரும் நிலையில், அண்மையில் அவ்வாறு சிறை பிடிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அண்மையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்போவதாக இலங்கை அரசு அறிவித்த நிலையில், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுடன் சேர்த்து 2 விசைப்படகுகளையும் மீட்டு தர வேண்டும். தமிழக மீனவர்கள்-இலங்கை கடற்படை இடையேயான நீண்டகால பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் மூலம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Related Tags :
Next Story