உள்ளாட்சி தேர்தல்; சென்னையில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1.06 கோடி பொருட்கள் பறிமுதல்


உள்ளாட்சி தேர்தல்; சென்னையில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1.06 கோடி பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Feb 2022 1:53 AM IST (Updated: 2 Feb 2022 1:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.06 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.



சென்னை,


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியான பின்பு, சென்னை மாநகராட்சியில் கடந்த 26ந்தேதி மாலை 6.30 மணி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.  உடனடியாக மாநகராட்சியில் மண்டலத்திற்கு தலா 3 குழுக்கள் என 45 குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்த குழுவினர், பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கு மேலான பொருட்களை எடுத்து சென்றால், அவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.  அதன்படி, சென்னையில் இதுவரை ரூ.1 கோடியே 6 லட்சத்து 52 ஆயிரத்து 710 மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெளிநாட்டு சிகரெட், அரிசி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Next Story