எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக, புதுச்சேரி மீனவர்கள் 21 பேர் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக, புதுச்சேரி மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 29-ந் தேதி விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இவர்கள் நேற்று முன்தினம் இரவு வேதாரண்யம் கோடியக்கரையின் தென்கிழக்கே இந்திய எல்லைப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.
கைது
அப்போது அங்கு வந்த இலங்கை மீனவர்கள் நாகை, காரைக்கால் மீனவர்களை சுற்றிவளைத்து தகராறு செய்தனர். இதனால் நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கும், இலங்கை மீனவர்களுக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அங்கு வந்த இலங்கை கடற்படையினர், நாகை விசைப்படகு மீனவர்கள் 12 பேரையும் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி விசைப்படகுடன் கைது செய்தனர். பின்னர் 12 மீனவர்களையும் இலங்கை மயிலட்டி துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
புதுச்சேரி மீனவர்கள்
இதேபோல் புதுச்சேரியை சேர்ந்த காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 31-ந் தேதி அதிகாலையில் 9 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் கோடியக்கரைக்கு தெற்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு 7-க்கும் மேற்பட்ட படகில் திடீரென வந்த இலங்கை மீனவர்கள் காரைக்கால் மீனவர்களை சுற்றி வளைத்தனர். தொடர்ந்து அங்கு வந்த இலங்கை கடற்படையினர், இலங்கை மீனவர்களை அனுப்பி விட்டு, காரைக்கால் மீனவர்கள் 9 பேரையும் விசைப்படகுடன் கைது செய்து காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
7-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவு
பின்னர் நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் 21 பேரையும் பருத்தித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மீனவர்களை வருகிற 7-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் ஒரு மீனவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது.

Related Tags :
Next Story