ஹர்ஷா டொயோட்டாவில்.. புதிய டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் 2022..
சென்னை கிண்டியில் உள்ள டொயோட்டோ ஹர்ஷா நிறுவனம் இன்று பிப்ரவரி 2 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள டொயோட்டோ ஹர்ஷா நிறுவனம் இன்று பிப்ரவரி 2 டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் கார் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து புதிய டொயோட்டா கேம்ரி காரை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் முக்கிய சிறப்பு விருந்தினரான Cousul. Dmitryi A Shcherbinin கன்சுலேட் ஜெனரல் ஆஃ ரஷ்யன் பெடரேஷன். சிறப்பு விருந்தினராக இந்திரா ப்ராஜெக்ட் நிறுவனத்தின் நிறுவன தலைவரும் FICCI நிறுவனத்தின் இணை தலைவரும் ஆகிய பூபேஷ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றார். மேலும் இந்நிகழ்வில் ஹர்ஷா டொயோட்டா முதன்மை செயல் அலுவலர் ஜெரோம் எட்வேர்ட் மற்றும் விற்பனைத் துறையில் துணைத் தலைவர் ஷர்மா கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.
கண்களுக்கு கனிவான அழகாய் மிகுந்து சொகுசு நிறைந்து சிறப்பாய் செயல்படக்கூடிய நுண்ணறிவு செடான் கார் என சொல்லப்படும் டொயோட்டா நிறுவனத்தின் கேம்ரி ஹைபிரிட் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. இந்தியாவெங்கிலும் ஒரே விலையாக எக்ஸ் ஷோரூம் விலை ரூபாய்41,70,000/-க்கு கிடைக்கிறது.
புதிய தோற்றத்திற்கு சிறப்பு அம்சமாக முன்புற பம்பர் மற்றும் கிரில் டிசைன் பற்றிச் சொல்லலாம். பிளோட்டிங் வகையிலான ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் பிளே இணக்க நிலை கொண்ட 9 அங்குல அளவுள்ள பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பிரிமியம் ஆடியோ ஜேபிஎல் தொழில்நுட்பத்தில் இயங்கும் நவீன ஒன்பது ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
18 அங்குல அலாய் வீல்கள் பயணத்தை மேம்படுத்தும் என்பதோடு ஒரு ஸ்போர்ட்ஸ் தோற்றத்தையும் வழங்குகிறது. எல்இடி பிரேக் லைட் களுடன் கூடிய புதிய தோற்றத்தில் ஆன ரியர் காம்பினேஷன் லேம்ப்கள் இப்போது ஒரு கருப்பு நிற எக்ஸ்டன்ஷன் உடன் கிடைக்கிறது. இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் அற்புத அழகுடன் விளங்குவது சிறப்பு.
இந்த ஃபேஸ்லிப்ட் கேம்ரி ஹைபிரிட் எலக்ட்ரானிக் செடான் பிளாட்டினம் ஒயிட் பேர்ல், சில்வர் மெட்டாலிக் கிராபைட் மெட்டாலிக் மைக்கா ஆடிடியூட் பிளாக் மற்றும் பேரனின் ப்ளாக் என்ற வண்ணங்களோடு தற்போது மெட்டல் ஸ்க்ரீன் மெட்டாலிக் என்ற புதிய வெளிப்புற வண்ணமும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுயமாக சார்ஜிங் செய்து கொள்ளும் ஹைபிரிட் தொழில்நுட்பம் மிகக்குறைவாக மாசு உமிழ்வு செய்யக்கூடிய தனிச்சிறப்பு வாடிக்கையாளர்கள் இடையே இது ஒரு கார்பன் உமிழ்வு இல்லாத சுற்று சூழல் இறக்கை கொண்ட கார் என்று மனம் கவர்ந்துள்ளது. ஏற்கனவே இந்தியர்களை அதிகம் கவர்ந்த உள்ள இந்த வாகனம் தற்போதைய வடிவமைப்பு மேலும் அதிக அளவு கவரும் என்பதில் ஐயமில்லை.
2.5 லிட்டர் 4 சிலிண்டர் கேசொலின் ஹைபிரிட் டைனமிக் எஞ்சினால் ஆற்றல் பெறும் இவ் வாகனத்தில் 170 கிலோ வாட்ஸ், 218 பிஎஸ, என்ற ஒருங்கிணைந்த ஆற்றல் வெளியீட்டை வழங்கும் சக்தி வாய்ந்த மோட்டார் ஜெனரேட்டர் இணைக்கப்பட்டிருக்கிறது. ஸ்போர்ட்ஸ், எக்கோ மற்றும் நார்மல் என்ற மூன்று டிரைவிங் வழிமுறைகளில் ஒன்றை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். வழிமுறையில் நான்லீனியர் திராட்டில் கண்ட்ரோல் வழியாக டைனமிக் ஆக்சிலரேட்டரை இன்னும் மேம்படுத்துகிறது. வலுவான ஹைபிரிட் வாகனங்கள் எலக்ட்ரிக் மோட்டார் 60% வரை இயக்கப்படும் திறன் கொண்டவை. மற்றும் இதன்மூலம் அதிக எரிபொருள் திறனை அவைகள் வழங்குகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
காரின் உள்புற அமைப்பு காரை லாவகமாக உற்சாகத்துடன் ஓட்டுவதற்கும் காரில் மகிழ்வாக பயணிப்பதற்கு ஏற்றதாக உள்ளது. குறிப்பாக 10 வழிமுறையில் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய ஓட்டுனர் இருக்கை ஆர்பிஎம் மற்றும் மெமரி செயல்திறனுடன் டில்ட் டெலஸ்காபிங் காலம் ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் மற்றும் ஹேட்ஸ் ஆப் டிஸ்ப்ளே ஆகிய மிக நவீன அம்சங்களின் தொகுப்பு இதன்பின் மிகச் சிறப்பாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. 9 ஏர்பேக்குகள், பின்புற வழிக்காட்டல் மானிட்டர் உடன் கூடிய பார்க்கிங் அசிஸ்ட், கிளியரன்ஸ் அண்ட் பேக் சோனார், வாகன ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் டிராக்ஷன் கன்ட்ரோல் கன்ட்ரோல் செயல்பாடுகளுடன் கூடிய எலக்ட்ரானிக் மற்றும் அழுத்தத்தை கண்காணிக்கும் அமைப்பு ஆகிய பல்வேறு மிக நவீன பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தும் பயணிகளுக்கு நியூ கேம்ரி ஹைபிரிட் வழங்குகிறது.
இப்போதைய கேம்ரி ஹைபிரிட் வாகனத்தில் உள்ள பேட்டரி எட்டு ஆண்டுகள் அல்லது ஒரு லட்சத்து 60 ஆயிரம் கிலோமீட்டர்கள் என்ற வாரன்டி ஓடு வருவது குறிப்பிடத்தக்கது இந்த புதிய டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் வாகனத்திற்கான முன்பதிவுகள் அதி வேகமாக நடைபெற்று வருகிறது வாடிக்கையாளர்கள் இந்த www.Harshatoyota.com இணையதளத்தில் சென்றோ அல்லது அருகிலுள்ள டொயோட்டோ ஷோரூமுக்கு நேரில் வருகை தந்து முன்பதிவு செய்யலாம்.
Related Tags :
Next Story