பொதுப்பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு தொடங்கியது
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று முதல்முறையாக ஆன்லைன் மூலம் தொடங்கியது.
சென்னை,
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் முதல் நாளில் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 73 பேரும், தொடர்ந்து 28-ந்தேதி நடந்த 2-வது நாளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில் 541 பேரும் மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை பெற்றனர்.
இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான அரசு மருத்துவ கல்லூரிகளின் 3,995 எம்.பி.பி.எஸ். இடங்கள், 157 பி.டி.எஸ். இடங்கள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 1,390 எம்.பி.பி.எஸ். இடங்கள், 1,166 பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வை முதல்முறையாக ஆன்லைனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
1,429 பேர்
அதன்படி, பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருந்த 1 முதல் 10,456 பேரில் 9 ஆயிரத்து 894 பேர் கடந்த ஜனவரி 30-ந்தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை ஆன்லைனில் பதிவு செய்தனர்.
இந்தநிலையில் நேற்று பொதுப்பிரிவு கலந்தாய்வு காலை 8 மணிக்கு https://tnmedicalselection.net/ மற்றும் https://www.tnhealth.tn.gov.in/ ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் தொடங்கியது.
இதையடுத்து பதிவு செய்திருந்த மாணவ, மாணவிகள் ஆர்வமாக தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்தனர். இதில் முதல் நாளான நேற்று ஒரே நாளில் மட்டும் 1,429 பேர் மருத்துவ கல்லூரிகளில் தங்களுக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர். பொதுப்பிரிவினர் வரும் 5-ந்தேதி மாலை 5 மணி வரை கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்யலாம். தொடர்ந்து வரும் 8-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை இடங்களை தேர்வு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
2-ம் கட்ட கலந்தாய்வு
இந்தநிலையில் வரும் 15-ந்தேதி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். 16-ந்தேதி கல்லூரிகளில் சேருவதற்கான ஆணையை மாணவர்கள் சுகாதாரத்துறை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தொடர்ந்து வரும் 17-ந்தேதி முதல் 22-ந்தேதி மதியம் 3 மணிக்குள் தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துவிட வேண்டும்.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு முடிவடைந்தவுடன், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதனைத்தொடர்ந்து காலியாகவுள்ள இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story