ஒரே வார்டில் போட்டியிடும் கணவன், மனைவி - சூடுபிடிக்கும் தேர்தல் களம்
பெரம்பலூர் நகராட்சியில் ஒரே வார்டில் சுயேச்சையாக கணவன் மனைவி களம் இறங்கியுள்ளனர்.
பெரம்பலூர்
தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்த வகையில் ஒவ்வொரு நகராட்சியிலும் மாணவிகள், பெண்கள், திருநங்கைகள் என்று வேட்பாளர்கள் களம் இறங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் பெரம்பலூர் நகராட்சியின் 20-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடுவதற்க சுரேஷ் தனது மனைவி இளமதியுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஒரே வார்டில் கணவன், மனைவி போட்டியிடுவது பெரும்பலூர் நகராட்சியில் சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது
Related Tags :
Next Story