தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.4.62 கோடி அபராதம் - தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்


தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.4.62 கோடி அபராதம் - தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம்
x
தினத்தந்தி 3 Feb 2022 3:10 PM IST (Updated: 3 Feb 2022 3:10 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.4.62 கோடி அபராதம் விதித்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

எண்ணூர் தாழங்குப்பத்தைச் சேர்ந்த ரவிமாறன் தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடுத்த பொதுநல வழக்கில், எண்ணூர் அணல்மின் நிலைய நிலக்கரி சாம்பலை வெளியேற்றுவதன் மூலம் கொசஸ்தலை ஆறு மாசுபடுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். நிலக்கரி சாம்பல் கழிவுகளால் கொசஸ்தலை ஆறு, எண்ணூர் சிற்றாறு, பக்கிங்காம் கால்வாயில் மாசு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சாம்பல் கழிவு குழாய்களை புதிதாக அமைக்கவும், ஆற்றுக்குள் செய்த கட்டுமானத்தால் நீரோட்டம் பாதிக்கப்ப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், ஆற்றின் குறுக்கே குழாய்கள் அமைக்கவும் தடை கோரினார். 

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஆறு மாசடைந்தது ஆய்வில் தெரிய வந்திருப்பதாக கூறி, மின்சார வாரியத்திற்கு 4 கோடியே 12 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. மேலும் குழாய் கட்டுமானம் அமைத்ததற்கு 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தீர்ப்பாயம், தமிழ்நாடு மின்சார வாரியம், மத்திய சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு கடற்கரை மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் மீது சட்டநடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. 

Next Story