விதவிதமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்


விதவிதமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 3 Feb 2022 4:48 PM IST (Updated: 3 Feb 2022 4:50 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக விதவிதமாக வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் வேட்பாளர்கள்.

கோவை

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் ஒதுக்கப்பட்டுள்ள அலுவலகங்களில் விதவிதமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில்  இன்று காலை 11 மணி அளவில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மாநகராட்சியின் 81-வது வார்டில் போட்டியிடும்  கார்த்திகேயன் மாட்டு வண்டியில் வந்து மனு தாக்கல் செய்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வு காரணமாகவும், தான் போட்டியிடும் பகுதியில் ஏராளமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளதாலும் அவர்களுக்கு ஆதரவாக மாட்டு வண்டியில் வந்ததாக அவர் தெரிவித்தார்.

இதே போன்று கோவை 32-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் சங்கனூரை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் குதிரையில் வந்து சிவானந்தா காலனி பகுதியில் உள்ள வார்டு அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிகாட்டும் வகையிலும், நான் வெற்றிபெற்றால் குதிரை வேகத்தில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என்பதை வெளிபடுத்தும் விதமாக குதிரையில் வந்து வேட்பு மனுத்தாக்கல் செய்து உள்ளேன் என்று தெரிவித்தார்.


Next Story