தமிழ்நாடு அரசின் சட்டத்தை கவர்னர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது..!! - அன்புமணி ராமதாஸ்
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழ்நாடு அரசின் சட்டத்தை கவர்னர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நீட் விலக்கு சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் சட்டத்தை கவர்னர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது. நீட் விலக்கு சட்டத்தை திருப்பி அனுப்புவதற்காக சுப்ரீம்கோர்டின் தீர்ப்பை மேற்கோள் காட்டி கவர்னர் கூறியுள்ள காரணங்கள் தேவையற்றவை!
நீட் விலக்கு சட்டம் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுவிட்ட நிலையில், இனியும் சர்ச்சைகளும், தாமதங்களும் ஏற்படுவதைத் தடுக்க, சட்டப்பேரவையை அவசரமாக கூட்டி, திருத்தங்களுடனோ, திருத்தமின்றியோ சட்டத்தை நிறைவேற்றி கவர்னருக்கு திருப்பி அனுப்ப வேண்டும்!
திருப்பி அனுப்பப்படும் நீட் விலக்கு சட்டத்திற்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளித்து ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்!” என்று அதில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story