பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை இன்று முதல் பிரச்சாரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
சென்னை,
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். அதன்படி இன்று சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளிலும், 7-ம் தேதி(நாளை) கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாநகராட்சிகளிலும் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
அதனை தொடர்ந்து 8-ம் தேதி நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் திருச்செந்தூர் நகராட்சியிலும், 9-ம் தேதி கோவில்பட்டி, விருதுநகர் நகராட்சி மற்றும் மதுரை, சிவகாசி மாநகராட்சிகளிலும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்ய உள்ளார்.
Related Tags :
Next Story