கரூர் மாவட்டத்திற்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்தி - மாவட்ட கலெக்டர் வரவேற்பு


கரூர் மாவட்டத்திற்கு வந்த குடியரசு தின அலங்கார ஊர்தி - மாவட்ட கலெக்டர் வரவேற்பு
x
தினத்தந்தி 6 Feb 2022 12:28 PM IST (Updated: 6 Feb 2022 12:28 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த குடியரசு தின அலங்கார ஊர்தியை மாவட்ட கலெக்டர் மலர் தூவி வரவேற்றார்.

கரூர்,

குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழக அரசு சார்பில் அலங்கார ஊர்திகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த அலங்கார ஊர்தியில் ஆங்கிலேயேயர்களை எதிர்த்து போராடிய தமிழக வீரர்களான மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், ஒண்டிவீரன், பூலித்தேவன், அழகுமுத்துக்கோன் ஆகியோரின் சிலைகள் இடம்பெற்றிருந்தன. 

ஆனால் மத்திய அரசு அதிகாரிகள் தமிழக அரசின் அலங்கார ஊர்தியை நிராகரித்தனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் அந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் தமிழக அரசின் அலங்கார ஊர்தி அனுப்பி வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

அந்த வகையில் தமிழக அரசின் 2 அலங்கார ஊர்திகள் கரூர் மாவட்டத்திற்கு இன்று வந்து சேர்ந்தன. இதனை மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் மலர் தூவி வரவேற்று, அதோடு செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த அலங்கார ஊர்திகள் பொதுமக்கள் பார்வைக்காக அங்குள்ள திருவள்ளுவர் மைதானத்தில் 2 நாட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story