கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் சத்தியப்பிரமாணம்
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நிலையை மாற்றிட உழைப்பேன் என்று கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது தேர்தல் பிரசாரத்தை சென்னை மந்தைவெளி விசாலாட்சி தோட்டம் பகுதியில் நேற்று தொடங்கினார். அவர், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலின்போது திறந்தவேனில் சென்று வாக்காளர்களை சந்தித்தார்.
தற்போது நடந்து சென்று வாக்காளர்களை சந்தித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளருக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். கமல்ஹாசனை பார்த்த மூதாட்டி ஒருவர் அவரது கையில் அன்பு முத்தமிட்டு வாழ்த்து கூறினார். கொரோனா பரவல் காரணமாக கமல்ஹாசன் தான் அணிந்திருந்த முக கவசத்தை கழற்றாமல் வாக்காளர்களிடம் வாக்குகள் திரட்டினார்.
கமல்ஹாசன் பேச்சு
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-
40 ஆண்டுகளாக நற்பணி இயக்கமாக இருக்கும்போது நான் சொல்லிக்கொண்டிருந்த அதே அறிவுரைகள் இன்று கொள்கைகளாக மாறி இருக்கிறது. நாம் தலைவர்களை தேடக்கூடாது. சமூக சேவகர்களை தேட வேண்டும். நமக்கு அவர்கள் சேவகம் செய்ய வேண்டும்.
அரசு, ஆட்சி என்பதை இருண்ட காலத்துக்கு எடுத்து செல்ல முற்படுகிறார்கள் இவர்கள். ஏழ்மையை இவர்கள் தக்க வைத்து கொண்டிருக்கிறார்கள். பாதுகாத்து கொண்டிருக்கிறார்கள். அதை நீக்க ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும்.
பகுதி நேர அரசியல்...
நீங்கள் எல்லாம் முழு நேர அரசியல்வாதி இல்லை. நாங்கள் அதை தான் முழு நேரமும் பேசிக்கொண்டு இருக்கிறோம். தன்னுடைய பிழைப்பை பற்றி பேசுவதற்கு அனைவருக்கும் நேரம் இருக்கிறது. வேலைக்கு சென்றுவிட்டு, சமைத்து முடித்துவிட்டு, தன் பிள்ளைகளுக்கு பாடமும் சொல்லிக்கொடுக்கும் உங்களுக்கு தெரியும். நீங்கள் (பெண்கள்) பகுதி நேர அரசியல் செய்தாலே, நாடு முழு நேர நல்ல நாடாக மாறிவிடும்.
மலத்தை மனிதன் அள்ளுவது இன்று வரை நடந்து கொண்டிருக்கிறது. செல்போன் கண்டுபிடிக்க முடிகிறது. ராக்கெட் விட முடிகிறது. ஆனால் என்னுடைய தம்பிக்காக ஒரு எந்திரம் கண்டுபிடிக்க முடியாதா?. இந்த அரசியல் பயணம் என்பது பதவிக்காக அல்ல. நம்முடைய சந்ததிக்காக ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தேர்தல் நிதி திரட்டப்பட்டது.
சத்தியப்பிரமாணம்
கூட்டத்தில் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக எதிர்கொள்வேன், கிராமங்களில் ‘கிராமசபை’ நடத்தப்படுவது போல், நகரங்களில் ஏரியா சபை, வார்டு கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வேன், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழி நிலையை ஒழிக்க அயராது உழைப்பேன் என்பது உள்பட 12 உறுதிமொழிகள் அடங்கிய சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

Related Tags :
Next Story