திருச்செந்தூரில் கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசித்திருவிழா
திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி,
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவிலில் உள்ள கொடிமரத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றத்தின் போது அரோகரா முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு மாசி திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டதுடன், எல்லா நிகழ்ச்சிகளிலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story