அரசு பஸ் ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 7 Feb 2022 10:54 AM IST (Updated: 7 Feb 2022 10:57 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்துத்துறை நடவடிக்கை.

சென்னை,

அரசு பஸ் ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையில் போக்குவரத்துத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும், நடத்துநர்கள், பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு, படிக்கட்டுகளில் யாரேனும் பயணம் செய்கிறார்களா, என்பதனையும், பயணிகள் ஏறும்போதும், இறங்கும்போதும் 2 படிகட்டுகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை மீறும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story