நகர்புற உள்ளாட்சி தேர்தல்: சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதல் அமைச்சர் ஆலோசனை
நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தலைமைச்செயலாளர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை,
நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நடத்தை விதிமுறைகள் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பது குறித்த பல்வேறு விஷயங்கள் பற்றி இந்த ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story