தமிழகத்தில் புதிதாக 5,104 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,120 இல் இருந்து 5,104 ஆக குறைந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் இன்று புதிதாக 1,18,782 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 5,104 ஆக உள்ளது.
தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 6,120 இல் இருந்து 5,104 ஆக குறைந்துள்ளது.
சென்னையில் மேலும் 839 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையில் ஏற்கனவே 972 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 839 ஆக குறைந்துள்ளது.
கொரோனாவால் மேலும் 13 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,772 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 6 பேரும் தனியார் மருத்துவமனையில் 7 பேரும் உயிரிழந்தனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,21,828ல் இருந்து 1,05,892 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 21,027 பேர் குணமடைந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story