கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து கட்டுமான தொழில் அதிபர் வீட்டில் 52 பவுன் நகை திருட்டு
கள்ளச்சாவி போட்டு கதவை திறந்து கட்டுமான தொழில் அதிபர் வீட்டில் 52 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 90 ஆயிரத்தை திருடிய ஏ.சி. மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை அம்பத்தூர், கள்ளிக்குப்பம், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 38). இவர் கட்டுமான தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் வெளியே சென்றுவிட்டார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்தபோது, பீரோவில் வைத்திருந்த 52 பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் ஆகியவை திருட்டுபோய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைக்கப்படாத நிலையில் நகை, பணம் திருட்டு போயிருப்பது தொடர்பாக பாலாஜி அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கள்ளச்சாவி
பாலாஜி வீட்டின் மேல் தளத்தில் வசித்து வரும் ஏ.சி.மெக்கானிக் ராஜா (32) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் அவர், பாலாஜி வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதற்காக ராஜா, பாலாஜி வீட்டு சாவியை கோதுமை மாவில் பதிய வைத்து, அந்த அச்சில் அலுமினியத்தை உருக்கி ஊற்றி கள்ளச்சாவி தயார் செய்ததும், பாலாஜி குடும்பத்துடன் வெளியே செல்வதை அறிந்து கள்ளச்சாவி போட்டு அவரது வீட்டின் கதவை திறந்து நகை, பணத்தை திருடியதும் தெரியவந்தது.
ராஜாவை போலீசார் கைது செய்தனர். திருட்டுபோனதாக புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து நகை, பணத்தை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல் புழல் லிங்கம் 1-வது தெருவைச் சேர்ந்த ஆட்டோ மெக்கானிக் சிவகுமார், வீட்டை பூட்டிவிட்டு உறவினர் இறுதிச்சடங்கில் பங்கேற்க பூந்தமல்லி சென்றுவிட்டார். மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.
மேலும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கட்டிட மேற்பார்வையாளர் செந்தில் குமார், சென்னைக்கு சென்றிருந்த நிலையில் மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டையும் உடைத்து 11 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.
அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இந்த திருட்டு தொடர்பாக புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story