கோவில் சொத்துகள் முறைகேடுகளுக்கு துணைபோகும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை
கோவில் சொத்து முறைகேடுகளுக்கு துணைபோகும் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை,
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 24 கிரவுண்ட் நிலத்தை மயிலாப்பூர் கிளப் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது. கடந்த2007-ம் ஆண்டு முதல் மாத வாடகை ரூ.2.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூ.50 ஆயிரம் உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டதால் மாத வாடகையாக ரூ.4.50 லட்சம் செலுத்த வேண்டுமென கிளப் நிர்வாகத்துக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
5 ஆண்டுகளுக்கு குத்தகை
அதன்படி ரூ.3 கோடி வரை பாக்கி உள்ளதாக கோவில் இணை ஆணையர் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி நோட்டீஸ் அனுப்பினார். இதை எதிர்த்து மயிலாப்பூர் கிளப் நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
கோவில் சொத்தை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே குத்தகைக்கு விட வேண்டும்.
அதிகாரிகளின் கடமை
அதற்கு மேல் நீட்டிக்க உரிய அனுமதி பெற வேண்டும் என்று அறநிலையத்துறை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்படவில்லை. கோவில் நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்துக்கொண்ட பிறகு, வெளிப்படைத்தன்மையுடன் கோவிலையும் அதன் சொத்துகளையும் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அதிகாரிகளுக்கு உள்ளது.
கடும் நடவடிக்கை
அந்த கடமையை செய்யாமல் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகளின் இத்தகைய செயல் அறநிலையத்துறை சட்டத்தை மீறுவது மட்டுமின்றி, கோவிலுக்கு தங்களது சொத்துகளை தானமாக வழங்கிய நன்கொடையாளர்களுக்கு அளித்துள்ள உத்தரவாதத்தை மீறும் செயலாகும். எனவே, மயிலாப்பூர் கிளப்புக்கு கடந்த 2016-ம் ஆண்டு வாடகை பாக்கியை வசூலிக்க அனுப்பி வைக்கப்பட்ட நோட்டீஸ் சரியானதுதான். அதை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Related Tags :
Next Story