அம்பத்தூரில் குடோனில் பதுக்கிய ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்


அம்பத்தூரில் குடோனில் பதுக்கிய ரூ.1 கோடி செம்மரக்கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Feb 2022 12:23 AM IST (Updated: 10 Feb 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூரில் குடோனில் பதுக்கிய ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை அம்பத்தூர், பட்டரவாக்கம் தொழிற்பேட்டை 2-வது தெருவில் பழைய இரும்பு உதிரிபாகங்கள் ஏற்றுமதி செய்யப்படும் குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வனப்பாதுகாவலர் நுண்ணறிவு பிரிவு அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், அங்கு சென்று குடோனில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு சிலை செய்வதற்கும், ஆடம்பரப்பொருட்கள் செய்வதற்கும் செம்மரக்கட்டைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, செதுக்கி சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

ரூ.1 கோடி மதிப்பு

ரூ.1 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றை சென்னை தலைமை உதவி வனப்பாதுகாவலர் நுண்ணறிவு மற்றும் புலனாய்வு வன காவல் நிலைய கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் அந்த செம்மரக்கட்டைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதில் தொடர்புடையவர்கள் யார்? என வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story