மு.க.ஸ்டாலின் தொடங்கிய அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு: ம.தி.மு.க. ஆதரவு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 10 Feb 2022 2:27 PM IST (Updated: 10 Feb 2022 2:27 PM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் தொடங்கிய அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்புக்கு ம.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.

சென்னை,

ம.தி.மு.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அமைப்பில் இணைந்திட முன்வருமாறு 37 கட்சிகளின் தலைவர்களுக்கு, கடிதம் வாயிலாக அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த வரிசையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார். இதை ஏற்று, அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பின் ம.தி.மு.க. பிரதிநிதியாக, வக்கீல் ஆவடி அந்தரிதா செயல்படுவார்.

மேலும், முதல்-அமைச்சரின் முயற்சிக்கு, வரவேற்பையும், வாழ்த்தையும் தெரிவித்து அவருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story