அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து; 10 பேர் காயம்


அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து; 10 பேர் காயம்
x
தினத்தந்தி 11 Feb 2022 3:27 PM IST (Updated: 11 Feb 2022 3:27 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.

 ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி  அரசு பேருந்து ஒன்ற சென்று கொண்டிருந்தது. பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வந்தபோது எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. 

இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் இருந்து 10  பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் இந்த விபத்து குறித்து அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு, காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர்.  இந்த விபத்து தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார்  வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர் .

Next Story