பேருந்து நிலையத்தில் தொழிலாளி குத்தி கொலை


பேருந்து நிலையத்தில் தொழிலாளி குத்தி கொலை
x
தினத்தந்தி 11 Feb 2022 4:37 PM IST (Updated: 11 Feb 2022 4:37 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே பேருந்து நிலையத்தில் நின்ற தொழிலாளியை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஹரி (வயது 35),  இவர் ஊட்டி லோயர் பஜார் சாலை உள்ள பேருந்து நிலையத்தில பேருந்துக்கா காத்திருந்தார். அப்போது கார்த்திக்(38) என்பவரும் அங்கு வந்தார். 

பின்னர் பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்த  ஹரியை தன் மறைத்து வத்திருந்த கத்தியால் காரத்திக் குத்தினார். இதனை கண்ட சகபயணிகள் பயத்தில் அலறி ஓடினர். பின்னர ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை மீட்டு 

ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் , இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


 ஊட்டியில் பட்டப்பகலில் பேருந்து நிறுத்தத்தில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தொழிலாளியை கத்தியால் குத்திய கார்த்திக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 


Next Story