திமுகவில் இருந்து விலகி பாஜக சென்ற கு.க.செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்தார்
பாஜகவில் இருந்து விலகிய கு.க செல்வம், திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சென்னை,
திமுகவில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம். முன்னதாக திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நபர் என்று கூறப்பட்ட இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய கு.க செல்வம், இன்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் கு.க செல்வம் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story