ரெயில் நிலையங்களில் ‘க்யூ ஆர்’ கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம்..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 13 Feb 2022 8:04 AM IST (Updated: 13 Feb 2022 8:04 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் நிலையங்களில் ‘க்யூ ஆர்’ கோடு மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட், மின்சார ரெயில் டிக்கெட்டுகளை எடுப்பதில் பயணிகளுக்கு கால தாமதத்தை தவிர்க்க தெற்கு ரெயில்வே தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரத்தை ஒவ்வொரு டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர் அறை அருகே வைத்துள்ளது.இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே டிக்கெட் எடுத்துக்கொள்ளலாம். இந்த நிலையில் மேலும் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரத்தில் ‘க்யூ ஆர்’ கோடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையையும் தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பயணிகள் ‘க்யூ ஆர்’ கோடை ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற செல்போன் செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்று கொள்ளலாம். மேலும் இந்த ‘‘க்யூ ஆர்‘‘ கோடு வசதி மூலம் சீசன் டிக்கெட்டை புதுப்பித்தால் பயணிகளுக்கு 0.5 சதவீதம் சலுகை கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Next Story