காதலர் தினத்துக்கு எதிர்ப்பு: நாய்களுக்கு திருமணம் செய்து வைத்த பாஜக-வினர்
உலகம் முழுவதும் நேற்று காதலர்தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம்,
காதலர் தினமான நேற்று உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் தங்களது அன்பினை பலவிதமாக வெளிப்படுத்தினர். ஒருவருக்கொருவர் சாக்லேட் மற்றும் பூக்கள் பரிமாறியும், ஜோடியாக கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு செல்வதும் என நேற்றையதினத்தில் உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
ஆனால் காதலர்தினத்தை எதிர்ப்பவரும் உண்டு. இவர்கள் நூதன முறையில் காதலர் தினத்தை எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தென்சிறுவளூர் என்ற பகுதியில் காதலர்தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க-வினர் நாய்களுக்கு திருமணம் செய்துவைத்தனர்.
இதேபோன்றதொரு சம்பவம் நெல்லையிலும் அரங்கேறியுள்ளது. நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள பிராஞ்சேரி கிராமத்தில் இந்து முன்னணி அமைப்பினர் நேற்று 2 தெருநாய்களை பிடித்து அவற்றுக்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘காதலர் தினத்திற்கு எதிராக தெரு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம்’ என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story