திமுகவில் இருந்து மேலும் 19 பேர் தற்காலிக நீக்கம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு


திமுகவில் இருந்து மேலும் 19 பேர் தற்காலிக நீக்கம் - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2022 10:34 AM IST (Updated: 16 Feb 2022 10:34 AM IST)
t-max-icont-min-icon

கட்சிக்கு எதிராக செயல்பட்ட மேலும் 19 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகிறார். 

இதற்கிடையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்ளை எதிர்த்து போட்டியிடும் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளுக்கு வேட்பாளர்களுக்கு எதிராக செயல்படுவோர் என மொத்தம் 107 பேர் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திமுகவில் இருந்து மேலும் 19 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டவர்கள், கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் என்ற அடிப்படையில் 19 பேர் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Next Story