கார் விபத்து: காதலர் தினத்தில் திருமணம் செய்த புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி
கார்- லாரி மோதிய விபத்தில் காதலர் தினத்தில் திருமணம் செய்து கொண்ட புது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள்.
கோவை
கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் ஷியாம் பிரசாத் (28). இவருக்கும் சுவாதி(24) என்ற பெண்ணுக்கும் நேற்று முன்தினம் காதலர் தினத்தன்று திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று காலை ஷியாம் பிரசாத், அவரது மனைவி சுவாதி, தந்தை சவுடையன் (62) மற்றும் தாய் மஞ்சுளா(55) ஆகிய 4 பேரும் காரில் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சுந்தராபுரம் சிட்கோ பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிப்பர் லாரியும், காரும் எதிர்பாராதவிதமாக் நேருக்கு நேர் மோதியது. இதில் கார் உருக்குலைந்து இடிபாடுகளுக்குள் 4 பேரும் சிக்கி கொண்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் 4 பேரையும் மீட்டனர். விபத்தில் ஷியாம் பிரசாத் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த மற்ற 3 பேரையும் போலீசார் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மஞ்சுளா பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சவுடையன் மற்றும் அவரது மருமகள் சுவாதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story