மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்: அண்ணாமலை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் திறந்த வேனில் இருந்தபடி பேசியதாவது:-
மத்திய அரசின் திட்டங்களை உங்கள் பகுதியில் செயல்படுத்த வேண்டும் என்றால் பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். பட்ஜெட்டில் பணம் ஒதுக்காமலும், அரசாணை இல்லாமலும் முதல்-அமைச்சர் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
கரூர் மாவட்டத்தில் இருந்து தி.மு.க. குழு கோவைக்கு வந்து கொலுசுகளை வழங்கி வருகிறார்கள். அதை ஆய்வு செய்தபோது 16 சதவிகிதம்தான் வெள்ளி உள்ளது. சட்டமன்ற தேர்தலின் போது எப்படி காதில் பூ சுற்றினார்களோ அதேபோன்று இப்போதும் பூ சுற்றுவார்கள். மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த பா.ஜனதா வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள்.
லஞ்சம் வாவண்யம் பெருகி விட்டது. 30, 40 சதவீதம் கமிஷன் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. ஸ்மார்ட் சிட்டிக்காக மத்திய அரசு நிதியை அள்ளி கொடுத்தது. ஆனால் எதுவும் சரி செய்யப்படவில்லை. சுத்தமான குடிநீரை வீடுகள் தோறும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே பிரதமரின் கனவு. அதை ஜல்சக்தி திட்டம் மூலம் கொண்டு செல்ல பா.ஜனதா வேட்பாளர்களை தேர்ந்தெடுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story