வாக்குச்சாவடி அருகே மோதிக் கொண்ட அதிமுக-திமுக பிரமுகர்கள்


வாக்குச்சாவடி அருகே மோதிக் கொண்ட அதிமுக-திமுக பிரமுகர்கள்
x
தினத்தந்தி 19 Feb 2022 2:41 PM IST (Updated: 19 Feb 2022 2:41 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வாக்குச்சாவடி மையத்தின் அருகே அதிமுக-திமுக பிரமுகர்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு

வேலூர், 

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகின்றது.  சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திர கோளாறு, அரசியல் கட்சியினர் முற்றுகை போன் நிகழ்வுகளுடன் வாக்கு பதிவு நடைபெற்ற வருகின்றது.

இந்த நிலையில் வேலூர் மாவட்டம் வேலைப்பாடி பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடடைபெற்று வருகின்றது. இந்த வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களிம் அரசியல் பிரமுகர்கள் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க செல்லி ஆதரவு திரட்டி வந்துள்ளனர்.

அந்த வகையில் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டிக் கொண்டிருந்த போது அதிமுக-திமுக தொண்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்ப்பட்டு உள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டதால் மோதல் ஏற்ப்பட்டு உள்ளது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த  தேர்தல் பாதுகாப்பு போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் வேலைப்பாடி வாக்குச்சாவடி மையத்தில் பதற்றம் நிலவியது.


Next Story