மு.க.ஸ்டாலின் பிரதமராக வந்தால் நாடே செழிக்கும்- டி.கே.எஸ் இளங்கோவன்
மு.க.ஸ்டாலின் பிரதமராக வந்தால் நாடே செழிக்கும் என திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை,
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறும்போது,
"தமிழக முதல்வர் தமிழக மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். மக்களோடு மக்களாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார். இரண்டு பேர் கையை நீட்டினால், நிறுத்தி என்னவென்று கேட்கிறார். இவரைப்போன்ற முதலமைச்சர் தற்போது யாரும் இல்லை என தலைவர்கள் கூறுகின்றனர். நாங்கள் டெல்லிக்கு செல்லும்போதெல்லாம் இதனை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
மு.க. ஸ்டாலினை போன்றவர்கள், பிரதமராக இருந்தால் நாடு செழிக்கும் என டெல்லியில் உள்ள அகில இந்திய தலைவர்கள் அனைவரும் எண்ணத்தொடங்கிவிட்டனர்" .இவ்வாறு திமுக எம்பி டி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story