சென்னையில் திமுக நிர்வாகி வெட்டிக்கொலை: போலீசார் விசாரணை
சென்னை காந்தி நகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் என்பவர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
சென்னை காந்தி நகர் பல்லவன் சாலையில் திமுக நிர்வாகி மதன் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் சிலநாட்களுக்கு முன்னர் தான் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று உள்ளாட்சித் தேர்தல் முடிந்த நிலையில் இன்று இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. தேர்தல் முன்பகை காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த இடத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story