உயிரிழப்பு 8 ஆக உயர்ந்தது தமிழகத்தில் 671 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் நேற்று 671 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 60 ஆயிரத்து 677 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 394 ஆண்கள், 277 பெண்கள் என மொத்தம் 671 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 169 பேரும், கோவையில் 96 பேரும், செங்கல்பட்டில் 78 பேரும், ஈரோட்டில் 30 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, ராமநாதபுரத்தில் தலா இருவரும், ராணிபேட்டை, திருப்பத்தூர், தென்காசியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதில் 12 வயதுக்கு உட்பட்ட 64 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 96 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 28 லட்சத்து 52 ஆயிரத்து 385 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 46 ஆயிரத்து 388 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 1,495 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 704 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 253 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்,
8 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று 8 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 2 பேரும், சென்னை, கோவை, சேலம், தூத்துக்குடி, திருச்சி, கன்னியாகுமரியில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். 31 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 989 பேர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 375 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 12 ஆயிரத்து 321 பேர் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :
Next Story