செங்கல்பட்டு, பாலாறு மேம்பாலத்தில் நாளை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி..!


செங்கல்பட்டு, பாலாறு மேம்பாலத்தில் நாளை முதல் மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதி..!
x
தினத்தந்தி 23 Feb 2022 7:23 PM IST (Updated: 23 Feb 2022 7:23 PM IST)
t-max-icont-min-icon

பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு,

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் நாளை திறக்கப்பட இருப்பதாக  தமிழக அரசு  அறிவித்து உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. இதையடுத்து, பாலம் சீரமைப்பு பணிக்காக, பாலத்தை மூடுவதாக கடந்த 7-ந்தேதி நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, திருச்சியிலிருந்து இருந்து சென்னை வரும் வாகனங்கள், மாற்றுவழியாக சுமார் 15 கி.மீ தூரம் சுற்றி வர உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் பாலாறு பாலத்தில் புதுப்பித்தல் பணி முடிவடைந்ததால் மீண்டும் நாளை (24ந்தேதி) போக்குவரத்துக்கு திறக்க இருப்பதாக நெடுஞ்சாலை துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இதையடுத்து, நாளை நள்ளிரவு முதல் இந்த பாலத்தில் போக்குவரத்து அனுமதிக்கப்பட உள்ளது.

Next Story