கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை
கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை நேரடி நியமன அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் சங்க ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் தரப்பில் கூறுகையில்,
அரசு விருந்தினர் மாளிகைகளில், முக்கிய பிரமுகர் வருகையையொட்டி மேற்கொள்ளப்படும் செலவினங்களை மாவட்ட நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தபோது, லஞ்ச வழக்கு தொடர்பாக துணை தாசில்தாரை தற்காலிக பணி நீக்கம் செய்த உத்தரவினை ரத்து செய்ய வேண்டும்.
மிக கடுமையான பணிச்சூழலிலும் காலநேரமின்றி பணியாற்றும் அலுவலர்கள் மீது நியாயமற்ற காரணங்களுக்கு எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கை உத்தரவை திரும்ப பெற வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றது என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story