‘தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்


‘தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் கடிதம்
x
தினத்தந்தி 23 Feb 2022 9:29 PM IST (Updated: 23 Feb 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

இலங்கை காவலில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மற்றும் அவர்களது உடமைகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த 17 ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையைச் சேர்ந்த 4 மீனவர்கள் மீது இலங்கையைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி அவர்களிடம் ஜி.பி.எஸ். கருவி, எரிபொருள் மற்றும் செல்போன்கள் பறித்துச் சென்றதாகவும், அதே போல் மற்றொரு சம்பவத்தில் ராமநாதபுரம் நம்புதாளையைச் சேர்ந்த 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்ததையும் முதல்-அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்துவதும், அவர்களது உடைமைகளை கொள்ளையடிப்பதும் சட்டத்திற்குப் புறம்பான செயல் மட்டுமல்லாது, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவும் உள்ளது என அக்கடிதத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகள், உடைமைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை காவலில் உள்ள 29 தமிழக மீனவர்கள், 82 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 


Next Story