5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 27-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்


5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 27-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
x
தினத்தந்தி 24 Feb 2022 12:23 AM IST (Updated: 24 Feb 2022 12:23 AM IST)
t-max-icont-min-icon

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 27-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் 43 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.

சென்னை,

போலியோவை (இளம் பிள்ளை வாதம்) ஒழிப்பதற்காக இந்தியாவில் ஆண்டு தோறும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து இந்தியாவில் வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல், ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஜனவரி 23-ந் தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், வரும் 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. அதன்படி, காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் முகாமில், 5 வயதுக்குட்பட்ட சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story