வாக்குப்பதிவு எந்திரம் பழுது: புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் இன்று மறுவாக்குப்பதிவு
வாக்குப்பதிவு எந்திரம் பழுது: புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டில் இன்று மறுவாக்குப்பதிவு உடனே வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்க ஏற்பாடு.
கடலூர்,
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் 18 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்பட்டன.
அப்போது 4-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி எண் 4-ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. பின்னர் பெல் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் சரிபார்த்தும், அதனை சரிசெய்ய முடியவில்லை. இதனால் 4-வது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டு திருவள்ளுவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண் 4-ல் 24-ந் தேதி (அதாவது இன்று) மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஒரு மணி நேரம் கொரோனா அறிகுறி உள்ளவர்கள், அதற்கான சான்றிதழை அளித்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
பின்னர் வாக்குப்பதிவு முடிந்ததும், அதே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து வாக்கு எண்ணிக்கை தொடங்கி, தேர்தல் முடிவு உடனே அறிவிக்கப்பட உள்ளது.

Related Tags :
Next Story