வெற்றி-தோல்வி எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை - கமல்ஹாசன் அறிக்கை
வெற்றி-தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை என்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகார பலம், பண பலம், கூட்டணி பலம், ஊடக பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றியாளர்கள்தான். நேர்மையாக தேர்தலை எதிர்கொண்ட வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காக உழைத்த கட்சியின் உறுப்பினர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் போட்டியிட்ட வார்டுகளில் நீங்கள் வென்றதாகவே நினைத்து மக்கள் பணியை தொடருங்கள்.
உங்களை வெற்றி பெற செய்யாததை நினைத்து வருந்தும் அளவிற்கு சேவையாற்றுங்கள். நாம் அரசியலுக்கு வந்தது மக்கள் பணி செய்வதற்குத்தான். வெள்ளி கொலுசு, ‘ஹாட் பாக்ஸ்', ‘அண்டா', ‘பட்டுப்புடவை', ரூ.2,000 முதல் ரூ.8,000 வரை பணம் என வாக்காளர்கள் விலை பேசப்பட்டபோதும் தன் ஆன்மாவை அடகு வைக்காமல் நேர்மைக்கு வாக்களித்த வாக்காளர்களின் நெஞ்சுரம் போற்றுதலுக்குரியது. அவர்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
கடமை
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள போதிய நிதி இல்லாமல் தடுமாறியபோது நேர்மை அரசியலுக்கு இயன்றதை தாருங்களென மக்களிடமே கோரிக்கை விடுத்தோம். தங்களால் இயன்ற பங்களிப்பை செய்தவர்களுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. பல இடங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்காளர்களே தங்களது வாக்குகளை செலுத்தி இருக்கிறார்கள். கழகங்கள் போட்ட கள்ள ஓட்டுகளை கழித்தால் இன்னமும் கூட குறைவான சதவீத மக்களே இந்த தேர்தலில் பங்கேற்றிருக்கிறார்கள்.
தமிழகத்தில் நிகழும் ஆபாச அரசியலை பெரும்பான்மை மக்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. எங்களைப்போன்ற மாற்று சக்திகளின் கரங்களை வலுப்படுத்தவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. என் எஞ்சிய வாழ்க்கை தமிழக மக்களுக்குத்தான் என 4 ஆண்டுகளுக்கு முன்பு நான் அறிவித்தது வெறும் வாய்ஜாலம் இல்லை. இடைக்கால வெற்றி தோல்விகள் எங்களின் மக்கள் பணியை என்றுமே பாதித்ததில்லை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளும் அதற்கு விதிவிலக்கல்ல.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story