கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி


கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி
x
தினத்தந்தி 24 Feb 2022 12:32 PM IST (Updated: 24 Feb 2022 12:32 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்த தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரை சேர்ந்த தொழிலாளி கார்த்திக்(வயது28). இவர் அப்பகுதியில் உள்ள ரெயில் நிலையம் அருகே குடிசை வீடு அமைத்து கடந்த 20 ஆண்டுகளாக வசித்துவருகின்றார். இவருக்கு அமுதா என்ற மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர்.

இவரது வீட்டை சுற்றி வசித்து வரும் சிலர் வீட்டை காலி செய்ய வற்புறுத்தி வருவதாக கடந்த மாதம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார். 

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கார்த்திக் வீட்டை அபகரிக்க முயற்சி செய்து வீட்டைச் சுற்றி பள்ளம் தோண்டி உள்ளனர். இதனால் அவர் வீட்டுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த கார்த்திக் தனது குடும்பத்துடன் இன்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.  அங்கு தான் வைத்திருந்த பிளேடை கொண்டு தனது கையை வெட்டி உள்ளார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் விரைந்து வந்து கார்த்திக் கையில் இருந்த பிளேடை பிடுங்கி அவரை தடுத்து நிறுத்தினர். 

பின்னர் வெட்டு காயத்துடன் இருந்த கார்த்திக்கை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். 

இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Next Story