12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி அமைச்சர் தகவல்
12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசியை, மத்திய அரசு அனுமதி அளித்ததும் தமிழகத்தில் செலுத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி மருந்துகள் சேமிப்பு கிடங்குக்கு மத்திய அரசிடம் இருந்து வரப்பெற்ற 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு அலுவலர் செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் உமா, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் உடன் இருந்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் கடந்த 11 ஆண்டுகளாகவும், தமிழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாகவும் போலியோ இல்லாத நிலை இருந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு 57 லட்சத்து 67 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட வேண்டி உள்ளது. அந்தவகையில் வருகிற 27-ந்தேதி 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ முகாம்கள் நடைபெற இருக்கிறது.
12 முதல் 15 வயது சிறுவர்கள்
மக்கள் நல்வாழ்வுத்துறை உள்பட பல சேவை துறைகளை சேர்ந்த சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள் இந்த பணிகளில் பயன்படுத்தப்பட இருக்கின்றனர். இதற்காக 3 ஆயிரம் வாகனங்களும் பயன்படுத்தப்பட இருக்கிறது. போலியோ சொட்டு மருந்து முகாமை 27-ந் தேதி காலை 8 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
ஏற்கனவே தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசு 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ என்ற புதிய தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. தமிழகத்தில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சுமார் 10 லட்சம் சிறுவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மத்திய அரசு 21 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகள் என இலக்கு நிர்ணயித்து ஒதுக்கீடு செய்துள்ளது.
அனுமதி அளித்ததும்...
அதில் இன்று (நேற்று) சென்னைக்கு 3 லட்சத்து 89 ஆயிரம் ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசிகள் வந்துள்ளன. அந்த தடுப்பூசிகளை தற்போது ஆய்வு செய்துள்ளோம். 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு முறையாக அறிவித்தவுடன் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த தடுப்பூசியை பொருத்தவரை, கோவேக்சின் தடுப்பூசியை போல, முதல் தவணை செலுத்தி 28 நாட்கள் கழித்து 2-வது தவணை செலுத்தப்படும்.
மத்திய அரசு அனுமதித்ததும், பள்ளிகளில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 15 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு அதிகமாக தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 82.27 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 37.64 சதவீதம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் என ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 91.39 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 72.05 சதவீதம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
மெகா தடுப்பூசி முகாம் தள்ளிவைப்பு
தமிழகத்தில் 1 கோடிக்கு மேற்பட்டோர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான், 3-வது அலையில் உயிரிழப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. 27-ந்தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளபட வேண்டி இருப்பதால், சனிக்கிழமை நடைபெற இருந்த 23-வது மெகா தடுப்பூசி முகாம் அடுத்த வாரம் தள்ளி வைக்கப்படுகிறது.
ஆனால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும், 67 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையங்களிலும் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி நடைபெற்று கொண்டிருக்கும். தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இணை இயக்குனர் நலப்பணிகள் பணியிடங்கள் ரூ.1 கோடியே 11 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டு, பணி ஆணைகள் இன்று (நேற்று) வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் விசாரணை
தமிழகத்தில் 12 வகையான நோய்களுக்கு 11 வகையான தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் மாதம் முதல் துரிதப்படுத்தப்படும். அயனாவரம் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் தொழிலாளர்களை, சாதி ரீதியாக டாக்டர்கள், நர்சுகள் திட்டுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அதனை தொழிலாளர் நலத்துறை ஆணையத்துடன் இணைந்து குழு அமைத்து விரைவில் விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story