கோவை இனி முதல்-அமைச்சர் ஸ்டாலினின் கோட்டை - அமைச்சர் செந்தில் பாலாஜி


கோவை இனி முதல்-அமைச்சர் ஸ்டாலினின் கோட்டை - அமைச்சர் செந்தில் பாலாஜி
x
தினத்தந்தி 26 Feb 2022 4:45 AM GMT (Updated: 26 Feb 2022 4:45 AM GMT)

இனி கோவை மாநகராட்சி முதல்-அமைச்சர் ஸ்டாலினின் கோட்டை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. அதன்படி கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கு 778 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குகள் 22-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் 73 வார்டுகளில் தி.மு.க.வினர் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். காங்கிரஸ் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க., ம.தி.மு.க. தலா 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ., ம.ம.க. தலா ஒரு இடங்களிலும் கொ.ம.தே.க. 2 இடங்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றன.

இந்த நிலையில் கோவை மாநகராட்சி இனி முதல் -அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கோட்டை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :

அதிமுக-வின் கோட்டை கோவை என மக்கள் ஒருபோதும் சொல்லவில்லை. முதல்வர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி அடைந்தோம். இனி கோவை மாநகராட்சி  முதல் - அமைச்சர் ஸ்டாலின் அவர்களின் கோட்டை .

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story