கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி கைது...!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கும்பகோணம்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் இளையராஜா(வயது 42). இவர், சென்னையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவருடைய மனைவி அனிதா(35) இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள நெய்வாசல் ஆகும். இவர்களுக்கு அனுஹாசினி(10) என்ற மகளும், நிரஞ்சன்(7) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அனிதா குழந்தைகளுடன் நெய்வாசல் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவியை பார்ப்பதற்காக நெய்வாசலுக்கு வந்த இளையராஜா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவருடைய உடல் அனிதா வீட்டின் பின்புறத்தில் கிடந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பந்தநல்லூர் போலீசார், இளையராஜாவின் மனைவி அனிதாவிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணைமேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் மூலம் கள்ளக்காதல் விவகாரத்தில் இளையராஜா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அனிதா அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:-
காட்டுமன்னார்கோவில் குச்சி பாளையத்தை சேர்ந்த இளையராஜாவின் சித்தப்பா மகன் ஜெயபால்(30) என்பவருக்கும், அனிதாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அனிதா வீட்டுக்கு வந்த இளையராஜாவை ஜெயபால் மற்றும் அனிதா ஆகிய இருவரும் அம்மிக் கல்லால் சரமாரியாக தாக்கி கொலை செய்து உள்ளதாக போலீசார் தெரிவத்துள்ளார்.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அனிதாவை கைது செய்த பந்தநல்லூர் போலீசார், ஜெயபாலை வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியே கணவரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story