உக்ரைனில் சிக்கி உள்ள மாணவனின் தாய் அதிர்ச்சியில் உயிரிழப்பு...!


உக்ரைனில் சிக்கி உள்ள மாணவனின் தாய் அதிர்ச்சியில் உயிரிழப்பு...!
x
தினத்தந்தி 27 Feb 2022 3:32 PM IST (Updated: 27 Feb 2022 3:32 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனில் சிக்கி உள்ள மாணவனின் தாய் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

வேலூர்,

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு புத்துரை சேர்ந்த விவசாயி சங்கர். இவரது மனைவி சசிகலா என்கிற பாப்பு (வயது 56). இவர்களுக்கு  சரத்குமார்,சக்திவேல் என்று 2 மகன்கள் உள்ளனர். சரத்குமார் ஆம்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இளைய மகன் சக்திவேல் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

சசிகலா 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில் சசிகலாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவர் அங்கு உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இந்த நிலையில்  உக்ரைன் மீது ரஷியா குண்டு வீசி தாக்குதல் நடத்தி வரும் செய்தியை சசிகலா அறிந்து உள்ளார்.  இதனால் உக்ரைனில் உள்ள மகனை எண்ணி சகிகலா மிகுந்த மன வேதனை அடைந்து உள்ளார். இதனால் சசிகலாவின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. 

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். உக்ரைனில் சிக்கி உள்ள  மகனின் நிலையை எண்ணி மனவேதனையில் இருந்த தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. 


Next Story