கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வைத்து நூதன வழிபாடு


கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வைத்து நூதன வழிபாடு
x
தினத்தந்தி 28 Feb 2022 4:20 PM IST (Updated: 28 Feb 2022 4:20 PM IST)
t-max-icont-min-icon

கோவில் திருவிழாவின் போது பக்தர் ஒருவரின் தலையில் தீ மூட்டி பொங்கல் வைக்கும் நூதன வழிபாடு நடைபெற்றது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பக்தர் தலையில் தீயிட்டு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

கடலூர்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் இன்று திருவிழா நடைப்பெற்றது. அப்போது பொதுமக்கள் முன்னிலையில் பக்தர் ஒருவர் தலையில் மண்ணெயில் நனைத்த துணையை சக்கர வடிவில் கட்டுகின்றனர். பின்னர், அவர் தலையில் வைத்து துணியை எரியவிட்டனர்.  பின் ஒரு பாத்திரத்தை தலை மீது வைத்து வெள்ளம் போட்ட பொங்கல் செய்வைத்தனர். அந்த பொங்களை சாமி  ஊர்வலம் வரும் போது சாமிக்கு படைத்தனர். 

பின்னர், குழந்தையில்லாதவர்களுக்கும் உடல் நிலைப் பாதிக்கப்பட்டவர்களுக்கும்  இந்த பொங்கலை பிரசாதமாக தருகின்றனர். பிரசாதத்தை வாங்கி சாப்பிடுபவர்களின் குறைகள் கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து அவர்கள் பிராத்தனை நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.


Next Story