அபூர்வ தகவல்களை கொண்டது: தியாக தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் எழுதிய நூல் நடிகர் சத்யராஜ் பேச்சு
தியாக தலைவரின் மகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூலில் அபூர்வ தகவல்கள் இடம் பெற்றுள்ளது என்று நடிகர் சத்யராஜ் கூறினார்.
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ என்ற நூல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-
தியாகத்தலைவரின் மகனாக பிறந்த முதல்-அமைச்சர் ஸ்டாலின் எழுதிய நூலை படிக்க, படிக்க சிரிக்கவும், ரசிக்கவும் முடிகிறது. ஆர்வமாகவும், உணர்ச்சி வசப்படவும் முடிகிறது. இந்த நூலில் பல அபூர்வமான தகவல்கள் எழுதப்பட்டு உள்ளது. அனைவரும் படிக்க வேண்டும்.
மருத்துவ கல்விக்கு சமஸ்கிருதம் எதற்கு?
தாத்தா முத்துவேல் பற்றி எழுதும் போது, புலவர் நன்றாக பாடுவார், விவசாயம், சமஸ்கிருதம் நல்லா தெரியும் என்று எழுதி உள்ளார். அப்படியானால் அவர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து டாக்டராக ஆகி இருக்கலாம். காரணம் அந்த காலத்தில் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்றால் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். இந்த நிபந்தனை ஏன் என்றால் நாம் மருத்துவ படிப்பு சேர கூடாது என்பதற்காகதான். அதனை அடித்து உடைத்தது நீதி கட்சி.
கோபாலபுரம் வீடு பற்றி எழுதும்போது நிரந்தர அரசவை, திராவிட கட்சியின் திருச்சபை, திரையுலகத்தின் கலைசபை என்று எழுதப்பட்டுள்ளது. அந்த கலைச்சபையில் நானும் ஒருவன்.
எம்.ஜி.ஆர். தீவிர ரசிகர்
மிசா காலத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டபோது, தி.மு.க. தொண்டர்கள் எப்படி கைது செய்யப்பட்டு சிறை செல்கிறார்களோ, அதேபோல்தான் ஸ்டாலினும் சிறை செல்கிறார் என்று எந்தவித வருத்தமும் இல்லாமல் கருணாநிதி கூறினார். ஒரு தலைவனே தொண்டனாக இருப்பதும், தொண்டனே தலைவனாக இருப்பதும்கருணாநிதிதான்.
அதேபோல், 2-ம் பாகம் ஆர்வமாக இருக்கும் என்று நினைக்கிறேன். எனவே மிசாவை மட்டும் ஒரு திரைப் படம் எடுக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். தீவிர எம்.ஜி.ஆர். ரசிகனான நான், எம்.ஜி.ஆர். தீவிர ரசிகரான ஸ்டாலினை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story