பூமிதான திட்டத்திற்க்கு ஒதுக்கப்பட்ட நிலம் ஆக்கிரமிப்பு
சத்தியமங்கலம் அருகே புறம்போக்கு நிலம் என கருதி வினோபாவின் பூமி தான திட்டத்திற்க்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் போடப்பட்ட குடிசையை அதிகாரிகள் அகற்றினர்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் அடுத்துள்ள குமராபாளையம் ஊராட்சியில் திட்டு குமரன் கோயில் அடிவாரத்தில் வினோபாவின் பூமிதான திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் பல வருடமாக வெட்டவெளியாக சும்மா கிடந்தது. இந்நிலையில் நேற்று இரவு பொதுமக்கள் சிலர் புறம்போக்கு நிலம் என கருதி தற்காலிக மூங்கில் நெட்டி மற்றும் தென்னை ஓலை கொண்டு கூரை அமைத்து போட்டி போட்டு இடம் பிடித்து கொண்டனர்.
இது பற்றி காலையில் அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கவே நில வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று அங்கு குடிசை போட்டவர்களை அலைத்து எந்த அனுமதியும் இல்லாமல் இப்படி குடிசை போடுவது சட்டப்படி குற்றம் என கூறி 50 தற்காலிக குடிசைகளைகளையும் பிரித்து காலி செய்தனர்.
Related Tags :
Next Story