கேரள அரசை கண்டிக்க தமிழக கம்யூனிஸ்டுகள் தயங்குவது வருத்தம் அளிக்கிறது ஓ.பன்னீர்செல்வம் வேதனை
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் இடையூறு செய்து வரும் கேரள அரசை கண்டிக்க தமிழக கம்யூனிஸ்டுகள் தயங்குவது வருத்தம் அளிக்கிறது என்று ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை,
முல்லை பெரியாறு அணை பகுதியில் பழுது பார்க்கும் பணிகளையும், அணையை வலுப்படுத்தும் பணிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள எந்தவித இடையூறையும் ஏற்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்து 8 ஆண்டுகள் ஆகியும், தீர்ப்பை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு நடந்து கொள்வதும், அதனை மத்திய நீர்வள ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் மிகவும் வருத்தம் அளிக்கிறது. முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவிடாமல் கேரள அரசு தொடர்ந்து தடுத்துக்கொண்டே இருப்பது என்பது தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் செயலாகும்.
ஏற்கனவே கேரள அமைச்சர்களும், அதிகாரிகளும் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது, முல்லை பெரியாறு அணையின் நீர்வரத்து உள்ளிட்ட தகவல்களை பெற கேரள அரசு சார்பில் என்ஜினீயர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று கூறுவது, கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் முல்லை பெரியாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டது என தமிழகத்தின் உரிமையில் தலையிடுகின்ற வகையில் கேரளா ஈடுபட்டு வருகின்றது. இந்தநிலையில் பராமரிப்பு பணிகளையும் தொடர்ந்து மேற்கொள்ளவிடாமல் இடையூறு விளைவித்து வருகிறது.
வருத்தம்
கேரள அரசின் இந்த செயலுக்கு அ.தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்துக்கு தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் கேரள அரசை கண்டிக்கக்கூட தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகள் தயக்கம் காட்டுவது உண்மையிலேயே வருத்தம் அளிக்கும் செயல். தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதை வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. தி.மு.க. அரசும் இந்த பிரச்சினையில் அவ்வளவு தீவிரம் காட்டுவதாக தெரியவில்லை.
அண்டை மாநிலமான கேரளாவில் தோழமை கட்சியின் ஆட்சி நடக்கிறது என்றால், தோழமை உணர்வுடன் பேசி தமிழ்நாட்டின் உரிமையை நிலை நாட்டுவதுதான் திறமையான ஆட்சிக்கு எடுத்துக்காட்டு. இதைத்தான் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எனவே கேரள முதல்-மந்திரியுடன் தனக்குள்ள செல்வாக்கையும், கம்யூனிஸ்டு கட்சியுடனான நெருக்கத்தையும் பயன்படுத்தி, முல்லை பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்குள்ள உரிமையை நிலை நாட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story