தற்கொலைக்கு முயன்றவர் 35 நாட்களுக்குப் பிறகு உயிரிழப்பு..!


தற்கொலைக்கு முயன்றவர் 35 நாட்களுக்குப் பிறகு உயிரிழப்பு..!
x
தினத்தந்தி 2 March 2022 3:59 PM IST (Updated: 2 March 2022 3:59 PM IST)
t-max-icont-min-icon

தொழிலில் நஷ்டமடைந்ததால் தற்கொலைக்கு முயன்று சிகிச்சையில் இருந்தவர் 35 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு,

காஞ்சிக்கோவில் அருகே உள்ள கள்ளச் சரளை பகுதிய சேர்ந்த மகேஸ்வரன்(33). இவர் ஒரு தனியார் நிறுவன மசாலா பொருட்களை ஏஜன்சி எடுத்து தொழில் செய்து வந்துள்ளார். அந்த ஏஜன்சி தொழிலில், எதிர்பாராவிதமாக பெருத்த நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நஷ்டத்தை தாங்கிக்கொள்ளமுடியாத மகேஸ்வரன், சம்பவம் நடந்த மாலை வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது பற்றிய விபரம் தெரியவந்த அவரது உறவினர்கள், உடனடியாக அவரை கவுந்தப்பாடியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட  பிறகு, மேல் சிகிச்சைக்காக மகேஸ்வரனை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையிலிருந்த மகேஸ்வரன், 35 நாட்களுக்குப் பிறகு நேற்று சிகிச்சை பலனளிக்காது இறந்து போனார். இது குறித்து தகவலறிந்த காஞ்சிக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன மகேஸ்வரனுக்கு, ஹேமலதா (27) என்கிற மனைவியும்,7 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர்.

Next Story